செய்திகள்

தமிழ் புத்தாண்டு பலன்கள்; குரு சனியால் ராஜயோகத்தை அடையும் தனுசு ராசி!

2022-ம் ஆண்டு சுபகிருது தமிழ்புத்தாண்டு முன் குரு, ராகு, கேது, பெயர்ச்சி நடப்பதோடு புத்தாண்டு தொடங்கி இரு வாரத்திலேயே சனி அதிசார பெயர்ச்சி நிகழப்போகிறது.

இப்படி ராகு, கேது, சனி பெயர்ச்சியானது மூன்று கிரகங்களும் பெயர்ச்சி அடைய உள்ளதால், இந்த புத்தாண்டு முக்கியம் வாய்ந்ததாக உள்ளது.

ராகு கேது

தனுசு ராசிக்கு கலவையான பலன்களை தர ராகு, கேது பெயர்ச்சி பலன் இருக்கு. இதனால் பிள்ளைகள் வழியில் செலவுகள் ஏற்படும்.

சொந்தங்களிடையே இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். பயணங்கள் அதிமாக இருக்கும். வெளியூர் பயணத்தால் லாபம் உண்டாகும்

சனிப்பெயர்ச்சி

சனி பகவான் ஏப்ரல் 28-ம் தேதி அதிசார பெயர்ச்சியாக கும்ப ராசிக்கு செல்ல உள்ளார்.

இதனால் 12 ஜூலை வரை கும்பத்தில் இருப்பார். அதுவரை தனுசு ராசிக்கு ஏழரை சனியிலிருந்து விடுதலை கிடைக்கும். 

இதனை சிறப்பாக பயன்படுத்தி உங்களின் முயற்சிகளுக்கு நற்பலனைத் தரக்கூடிய காலமாக இருக்கும் என்பதால் கடின உழைப்பை மேற்கொள்ளுங்கள்.

குருப்பெயர்ச்சி 2022

குரு ஆனவர் ஏப்ரல் 13ம் தேதி மீன ராசிக்குப் பெயர்ச்சி ஆக உள்ளார். கால புருஷ தத்துவத்தில் 9ம் வீடாக அமைந்திருப்பது தனுசு ராசி.

குரு பகவான் அதிபதியாக கொண்ட தனுசு ராசிக்கு மூல திரிகோண வீடு, திரிகோணத்தில் அமையும் கிரகம் குரு பகவான்.

4ம் வீடான சுக ஸ்தானத்தில் குரு பெயர்ச்சி ஆக உள்ளார். சுக போகங்கள் கூடும். இதனால் குரு அமர்ந்திருக்கும் இடத்தை விட, அவர் பார்க்கக்கூடிய 5, 7, 9 பார்வை பலன் மிகவும் சிறப்பானதாக இருக்கும்.

24 வயது தமிழ்பெண்ணை பாராட்டிய கிரிக்கெட் பிரபலம்! ஏன் தெரியுமா? 

குருவின் 5ம் பார்வை

மற்றவர்கள் தோல்வி, நஷ்டம் உங்களுக்கு கிடைக்கக் கூடிய லாபமாக இந்த பலன் இருக்கும்.

உடல் உறுப்புகளிலிருந்த வியாதிகள் குணப்படக்கூடிய காலமாக இருக்கும். 

குரு 7ம் பார்வை

வேலை, தொழிலை சிறப்பாக செய்வதற்கான சூழல் அமையும். நல்ல புதிய வேலை அமைய வாய்ப்புள்ளது.

9ம் பார்வை

12-ம் இடமான விரய ஸ்தானம், தூக்கம், மோட்சத்தைக் குறிக்கக்கூடிய ஸ்தானத்தை குருவின் பார்வை விழுவதால், இதுவரை இருந்த அலைச்சல்கள், வீண் செலவுகள் குறையும். குறிப்பாகப் படுத்தால் நல்ல தூக்கம் கிடைக்கும்.

வழிபாடு

பெளர்ணமி தினங்களில் குல தெய்வ வழிபாடு செய்யவும். அடிக்கடி சிவாலய வழிபாடு செய்யவும். 

Back to top button